சுற்றி வளைப்பில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது-இரு சந்தேக நபர்களும் கைது

ITN News Editor
By ITN News Editor மே 25, 2019 14:50

சுற்றி வளைப்பில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது-இரு சந்தேக நபர்களும் கைது

வடக்கு கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 245 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அவற்றின் பெறுமதி இரண்டு கோடியே 69 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து, வடக்கு கடற்பகுதியினூடாக இலங்கைக்கு வருகைத்தந்த டிங்கி படகை சோதனையிட்டபோதே போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார். அவர்கள் அடுத்தகட்ட விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 25, 2019 14:50

Default