மின் பாவனையாளர்களுக்கு நிவாரண விலையில் LED மின்குமிழ்களை வழங்க மின்சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் முதல் மின்குமிழ்கள் வழங்கப்படும். முதற்கட்டமாக 10 இலட்சம் மின்குமிழ்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். வீடொன்றுக்கு 3 LED மின்குமிழ்கள் வீதம் வழங்கப்படுமென மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். மின்குமிழ்களை வீடுகளுக்கு சென்று வழங்குதல், நடமாடும் சேவை மற்றும் பிரதேச மின்சார சபை அலுவலகங்களினூடாக வழங்குதல் என மூன்று முறைகளில் LED மின்குமிழ்கள் விநியோகிக்கப்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிவாரண விலையில் கிடைக்கிறது LED மின் குமிழ்கள்
படிக்க 0 நிமிடங்கள்