பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்தி பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவுசெய்யப்படுமென வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த வீதியை அபிவிருத்தி செய்வதன் மூலம் சுற்றுலாத்துறையும் வளர்ச்சியடையுமென திட்டப்பணிப்பாளர் விஜித ஜயக்கொடி தெரிவித்துள்ளார். வீதி அபிவிருத்தி பணிகள் 75 வீதம் நிறைவடைந்துள்ளன. பதுளையிலிருந்து பசறை வரைக்கும், பசறையிலிருந்து லுணுகல வரைக்கும் மற்றுமொரு கட்டமாகவும் வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெறுகின்றன. லுணுகலயிலிருந்து பிபிலை வரையான பகுதியின் வீதி அபிவிருத்தி பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிபிலையிலிருந்து செங்கலடி வரை 80 கிலோமீற்றர் நீளம் காணப்படுகிறது. திட்டத்தில் மொத்தமாக 120 கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி செய்யப்படுவதாக திட்டப்பணிப்பாளர் விஜித ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்தி பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவு
படிக்க 1 நிமிடங்கள்