fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை கொள்வனவு செய்யும் மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன

ITN News Editor
By ITN News Editor மே 25, 2019 14:14

மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை கொள்வனவு செய்யும் மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன

மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை கொள்வனவு செய்யும் மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. நாடு பூராகவும் மத்திய நிலையங்களை அமைக்கவுள்ளதாக சுற்றாடல் பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார். முதற்கட்டம் பாடசாலை மட்டத்தில் ஆரம்பிக்கப்படும். கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் கழிவுகளை கொள்வனவு செய்யும் மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார். இதற்கு ‘நிகசல பியச’ என பெயரிடப்பட்டுள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்கும் பாடசாலைகளுக்கு நிகசல பியச வழங்கப்படும். நாட்டின் முக்கிய நகரங்களில் நிகசல பியச மையங்கள் உருவாக்கப்படும். பொதுமக்கள் மீள் சுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை நிகசல பியச மையங்களுக்கு வழங்கி காசுபெற்றுக்கொள்ள முடியும். இதுவொரு மேலதிக வருமானமாகவும் அமையுமென பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மே 25, 2019 14:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க