fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பயிற்சிப்போட்டியில் பாகிஸ்தானை வென்ற ஆப்கான்

ITN News Editor
By ITN News Editor மே 25, 2019 13:43

பயிற்சிப்போட்டியில் பாகிஸ்தானை வென்ற ஆப்கான்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான நேற்று இடம்பெற்ற பயிற்சி போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. போட்டி தென்னாபிரிக்கா அணிக்கெதிராக கார்டிப்பில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களை பெற்றது. அணித்தலைவர் பெப் டூ பிளெஸிஸ் 88 ஓட்டங்களையும், ஹசிம் அம்லா 65 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் சுரங்க லக்மால் மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். பதிலுக்கு 339 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 42.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 251 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 87 ஓட்டங்களையும், எஞ்சலோ மெத்தியூஸ் 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பெலுக்வாயோ 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதேவேளை நேற்று இடம்பெற்ற மற்றுமொரு பயிற்சி போட்டியில் பாகிஸ்தானை தோல்வியடையச்செய்து ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றியீட்டியது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 47.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 262 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

ITN News Editor
By ITN News Editor மே 25, 2019 13:43

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க