குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக இரண்டாயிருத்து 200 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor மே 24, 2019 13:24

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக இரண்டாயிருத்து 200 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக மேலும் 2 ஆயிரத்து 200 வீடுகளை நிர்மாணிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கி நிதி உதவி வழங்கவுள்ளது. மாளிகாவத்தை புகையிரத திணைக்கள காணி, கெத்தாராம எபிள்வத்தை, புளுமென்டல் கிம்புலாஎல மற்றும் ரத்மலானை நீர்ப்பாசன காணிபோன்ற பகுதிகளில் புதிய வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

கொழும்பிலுள்ள 50 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற புனர்வாழ்வு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டம் முழுமையாக நிறைவடையும் போது 400 ஏக்கர் காணி வர்த்தக செயற்பாடுகளுக்காக விடுவிக்கப்படுமென பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 24, 2019 13:24

Default