fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இரு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் பெண் ஒருவர் பலி : 20 பேர் காயம்

ITN News Editor
By ITN News Editor மே 24, 2019 12:42

இரு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் பெண் ஒருவர் பலி : 20 பேர் காயம்

 மாரவில உடுபத்தாவ வீதியின் நாத்தாண்டிய பகுதிக்கு பயணித்த பஸ் வண்டியொன்று முன்னால் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் ஏற்பட்டவிபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் உயிரிழந்தார். 62 வயதுடைய எத்துன்கஹகொட்டுவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.

இதேவேளை இரததினபுரி எம்பிலிபிடிய பிரதான வீதியின் கொடக்கவெல கலஹிட்டிய பகுதியில் பஸ் வண்டியொன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொல்கலனுடன் மோதியது. சம்பவத்தில் பஸ் வண்டியில் பயணித்த இருபது பேர் காயமடைந்தனர். அவிசாவெல பகுதியில் திருமண நிகழ்வொன்றுக்கு கலந்து கொள்வதற்காக சென்றவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகினர். காயமடைந்தவசர்களில் 11 பெண்களும் 3 சிறுவர்களும் அடங்குகின்றனர். இவர்கள் கொடக்கவெல மற்றும் கஹவத்த வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ITN News Editor
By ITN News Editor மே 24, 2019 12:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo