பாராளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடவுள்ளது. அவசரகால சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பது தொடர்பில் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வது குறித்து இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளன.
இதேவேளை நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.