அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபயணியமாட்டோம் : ஈரான் ஜனாதிபதி
Related Articles
அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு நாம் ஒருபோதும் அடிபயணியமாட்டோமென ஈரான் ஜனாதிபதி ஹசன் ரோஹானி தெரிவித்துள்ளார். ஈரானுடான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதையடுத்து இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஈரான் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.
இந்நிலையில் மத்திய கிழக்குப் பகுதியில் போர் கப்பல், போர் விமானம் மற்றும் ராணுவ தளபாடங்களையும் அமெரிக்கா குவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து இரு நாடுகளுக்குமிடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இது தொடர்பில் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரோஹானி கருத்து வெளியிட்டுள்ளார்.
ஈரானின் உறுதியான வளர்ச்சியை சிதைத்து விடலாம் என்பது எதிரிகளின் மாயை ஆகும். பொருளாதார தடைகளால் உருவாகி இருக்கும் நெருக்கடியான சூழ்நிலையிலும் ஈரான் நிலையான வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது அமெரிக்காவுக்கு நாம் தெரிவிக்கும் தீர்க்கமான பதிலெனவும் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரோஹானி மேலும் தெரிவித்துள்ளார்.