சிசு மரண வீதத்தைக் குறைப்பதில் இலங்கை சிறப்பான பெறுபேறுகளை அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணிமனை அறிவித்துள்ளது. குறிப்பாக பேறு காலத்தின் முதல் 28 வாரங்களின் பின்னர் கர்ப்பத்தில் நிகழும் மரணங்களும், பிறந்து எழு நாட்களுக்குள் நிகழும் சிசு மரணங்களும் பெருமளவில் குறைந்துள்ள விடயம் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வை யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து சுகாதார அமைச்சு நடத்தியிருந்தது. இலங்கையின் சிசு மரண வீதம் உலகில் மிகவும் வளர்ச்சி கண்ட நாடுகளில் நிலவும் அளவிற்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.