190வது மாதிரி கிராமம் இன்று மக்கள் உரிமைக்கு வழங்கப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கென 100 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது.
இதேவேளை 2 ஆயிரத்து 319 மாதிரிக்கிராமங்களுக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதம் 23ம் திகதிக்குள் 2 ஆயிரத்து 500 மாதிரிக்கிராமங்களை நிர்மாணிக்கும் இலக்கு பூரணப்படுத்தப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் மேலும் சில வீடமைப்பு திட்டங்கள் மக்கள் உரிமைக்கு வழங்கப்படவுள்ளன. அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் குறித்த வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.