30 வருடகால யுத்த வெற்றியின் உண்மைக் கதையை அடுத்த பரம்பரை அறிந்துகொள்வதற்கு வழியமைக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதனை புத்தகமாக கட்டியெழுப்புவது காலத்தின் தேவையாகும்.
இதனூடாக தாய்நாட்டை நேசிக்கும் எதிர்கால பரம்பரையொன்றை நிர்மாணிக்க முடியுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற மூத்த இராணுவ வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.