இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் அமைதியின்மை ஏற்ப்பட்டுள்ளது. பாதுகாப்பு தரப்பினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. கடந்த மாதம் இடம்பெற்ற இந்தோனேஷிய ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஜகார்த்தா உட்பட பல முக்கிய நகரங்களில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களை கலைப்பதற்கு பொலிசார் முயற்சித்த நிலையில் மோதல் ஏற்ப்பட்டுள்ளதாக இந்தோனேஷிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.
இதேவேளை மோதல்கள் காரணமாக தலைநகர் ஜகார்த்தாவில் வர்த்தக செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன் பொது சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.