fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜொக்கோ விடோடோவின் வெற்றிக்கு எதிராக இந்தோனேஷியாவில் ஆர்ப்பர்டடம் : 6 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor மே 22, 2019 14:32

ஜொக்கோ விடோடோவின் வெற்றிக்கு எதிராக இந்தோனேஷியாவில் ஆர்ப்பர்டடம் : 6 பேர் பலி

இந்தோனேஷிய பொதுத்தேர்தலில் ஜனாதிபதி ஜொக்கோ விடோடோ வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், 55.5 வீத வாக்குகளை பெற்ற ஜொக்கோ விடோடோ வெற்றிப்பெற்றதாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணையகம் அறிவித்தது. அவரை எதிர்த்து போட்டியிட்டிருந்த முன்னாள் இராணுவ அதிகாரி ஜெனரல் பிரபாவோ 44.5 வீத வாக்குகளை பெற்றார். இத்தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

இதனால் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடுமென்ற சந்தேகத்தில் முன்னெச்சரிக்கையாக இந்தோனேஷியாவின் முக்கிய பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே தலைநகர் ஜகார்த்தாவில், ஜொக்கோ விடோடோவின் வெற்றிக்கெதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம், வன்முறையாக மாறியுள்ளது. வாகனங்கள் போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டதோடு, பொலிஸார் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த வன்முறைகளினால் 6 பேர் பலியானதாகவும், மேலும் 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் இந்தோனேஷிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன. இதனையடுத்தே சம்பவம் தொடர்பில் இதுவரை 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மே 22, 2019 14:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க