தேசிய அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிப்பில் புதிய பாதுகாப்பு நடைமுறை

ITN News Editor
By ITN News Editor மே 22, 2019 12:49

தேசிய அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிப்பில் புதிய பாதுகாப்பு நடைமுறை

தேசிய அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை புதிய பாதுகாப்பு நடைமுறைகளினூடாக தயார் செய்யவுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். இவை போலியாக தயாரிக்கப்படுவதால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அதனை தடுக்கவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் பதிவாளர் ஆணையாளர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களை ஒன்றிணைத்து இதுதொடர்பான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

உலக நாடுகளில் பயன்படுத்தப்படுகின்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேசிய அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் தயாரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor மே 22, 2019 12:49

Default