2017ம் ஆண்டை விட கடந்த ஆண்டு அரச வருமானம் 9300 கோடி ரூபாவினால் உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு அரசின் முழு வருமானம் 1932.5 பில்லியன் ரூபாவென மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
2017ம் ஆண்டு அரசாங்கத்தின் மொத்த வருமானமாக 1839.6 பில்லியன் ரூபா இருந்தது. இவ்வருடத்தில் அரச வருமானத்தில் வரி வருமானம் வரியில்லா வருமானம் மற்றும் அரசாங்கத்துக்கு கிடைத்த மீள் திருப்பிச் செலுத்தாத அன்பளிப்புக்கள் ஆகியவற்றில் அதிகரிப்பு கடந்த வருடம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அரசாங்கத்துக்கு வரி வருமானத்தை பெற்று கொள்வதில் இலங்கை சுங்க திணைக்களம் உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் கலால் திணைக்களம் ஆகியன நேரடி பங்களிப்பை வழங்குகின்றன. கடந்த ஆண்டு அரசாங்கத்துக்கு கிடைத்த வருமானத்தில் 1712.3 பில்லியன் ரூபா வரி வருமானம் என்பதுடன், 207.7 பில்லியன் ரூபா வருமானம் வரியற்ற வருமானம் ஆகும்.
2017ம் ஆண்டு அரசாங்கத்துக்கு கிடைத்த வரி வருமானம் 1670.2 பில்லியன் ரூபாவாகும். வரியற்ற வருமானங்கள் 161.4 பில்லியன் ரூபாவாகும். கடந்த ஆண்டு அரசாங்கத்துக்கு கிடைத்த அன்பளிப்புக்களின் பெருமதி 12.5 பில்லியன் ரூபாவாகும்.