வீடுகள் பலவற்றில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது
Related Articles
வீடுகள் பலவற்றில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் அத்துருகிரிய பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துருகிரிய, நவகமுவ மற்றும் கடுவல ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளில் இந நபர் கொள்ளையிட்டு வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட கணினிகள், தொலைகாட்சி பெட்டிகள், மின் உபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த நபர் கடுவலை நகரில் வீடு ஒன்றை வாடகை அடிப்படையில் பெற்று இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.