fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இராணுவத்தில் சிரேஷ்ட அதிகாரிகள் 38 பேருக்கு பதவியுயர்வு

ITN News Editor
By ITN News Editor மே 18, 2019 12:12

இராணுவத்தில் சிரேஷ்ட அதிகாரிகள் 38 பேருக்கு பதவியுயர்வு

இராணுவத்தில் சிரேஷ்ட அதிகாரிகள் 38 பேருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. தேசிய இராணுவ தினத்தை முன்னிட்டு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய சிரேஷ்ட அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டதாக இராணுவத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பதவி உயர்வுக்கான கடிதங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளார்.

இதேவேளை இராணுவத்தின் விசேட படையணிக்கு வீரர்களை இணைத்துக்கொள்ளும் பணிகள் டிசம்பர் மாதம் 31 ம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

கடந்த 15 ம் திகதி முதல் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதேவேளை விரிவான நேர்முகப் பரீட்சை நடைபெறுமென இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மே 18, 2019 12:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க