யாழ் பல்கலை. மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீட கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பம்
Related Articles
யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களும் கற்றல் நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 22 ம் திகதி ஆரம்பிக்கப்டுமென பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கலைப்பீடம், விஞ்ஞானபீடம், முகாமைத்துவ மற்றும் வணிக பீடம், விவசாய பீடம், பொறியியல் பீடம், தொழிநுட்ப பீடம், சித்த மருத்துவ அலகு என்பவற்றின் கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல்கலைக்கழக விடுதி வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் விடுதிக்குள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை மாணவர்கள் தங்களை பல்கலைக்கழக மாணவர் என்று உறுதிப்படுத்தக்கூடிய வகையில் பல்கலைக்கழக அடையாள அட்டையோ அல்லது பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட ஆவணத்தையோ பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள சந்தர்ப்பத்தில் வைத்திருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவேளை மருத்துவபீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களின் மாணவர்களின் பிற்போடப்பட்டிருந்த பரீட்சைகள் யாவும் எதிர்வரும் 27 ம் திகதி முதல் ஆரம்பமாகுமென யாழ்ப்பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.