fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறைச்சாலை வரலாற்றில் கூடுதலான சிறைகைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை

ITN News Editor
By ITN News Editor மே 18, 2019 10:30

சிறைச்சாலை வரலாற்றில் கூடுதலான சிறைகைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை

சிறைச்சாலை வரலாற்றில் கூடுதலான சிறை கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். 762 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர். அவர்களுக்கு விடுதலை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் வெலிக்கடை சிறைச்சாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக சட்டம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்முறை வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி சிறை கைதிகளுக்கு என விசேட நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இதற்கிணங்க இன்றைய தினம் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையென சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலாக நாளை மற்றும் நாளை மறுதினம் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 18, 2019 10:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க