fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெசாக் நோன்மதி

ITN News Editor
By ITN News Editor மே 18, 2019 10:13

வெசாக் நோன்மதி

இன்று வெசாக் நோன்மதி தினமாகும். தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய அனைத்து மக்களும் ஒன்றிணைந்து இம்முறை வெசாக் உற்சவத்தை கொண்டாடுகின்றமை விசேட அம்சமாகும். அரச வெசாக் நிகழ்வு நேற்று காலி – ஹிக்கடுவ தெல்வத்த தொட்டகமுவ விகாரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்புடன் ஆரம்பமானது. இதனையடுத்து இன்று முற்பகல் முதல் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

புத்தசாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சு, பௌத்த விவகார திணைக்களம் மற்றும் காலி மாவட்ட செயலகம் என்பன இணைந்து வெசாக் உற்சவத்தை ஏற்பாடு செய்துள்ளன. இந்நிலையில் இம்முறை வெசாக் உற்சவத்திற்கென இன்றையதினம் அலரி மாளிகையில் விசேட பூஜை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 18, 2019 10:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க