fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

ITN News Editor
By ITN News Editor மே 17, 2019 12:33

அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை இன்று சந்தித்து கலந்துரையாடிவுள்ளார். இதன்போது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்க ராஜாங்க செயலாளர் கண்டம் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்கர்கள் ஐவரும் பலியாகினர். இதேவேளை பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவை வழங்குமென அந்நாட்டு இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பயங்கரவாத தாக்குதலையடுத்து அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு வெளிவிகார அமைச்சர் திலக் மாரப்பன நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்காக அமெரிக்கா 480 மில்லியன் டொலரை வழங்கவுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் முக்கியமானதொரு முன்னேற்றமென இருவரும் வரவேற்றனர். இதேவேளை பொறுப்புக் கூறல் நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கான உறுதிபாடுகள் தொடர்பிலும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 17, 2019 12:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க