தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் அனுஷ்கா தமிழில் வெளியான ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக 20 கிலோ எடை அதிகரித்தார். அதன் பின் ‘பாகுபலி’ படத்தில் தேவசேனாவாக நடித்த அனுஷ்காவால் தன்னுடைய பழைய உடல் எடைக்கு திரும்ப முடியவில்லை.
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2019/05/anushka.jpg”]
தற்போது பெரும் முயற்சிகளுக்குப் பிறகு, தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ள அனுஷ்கா, அதற்காகத்தான் எடுத்த முயற்சிகளை தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து ‘தி மேஜிக் வெயிட்லாஸ் பில்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட இருக்கிறார். இந்தப் புத்தகத்துக்கு ஷில்பா ஷெட்டி முன்னுரை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.