பங்களாதேஷ் அணி வெற்றி
Related Articles
டப்ளினில் நடைபெறும் முக்கோண ஒருநாள் கிரிக்கட் தொடரின் 6வது போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது. நேற்றைய தினம் போட்டி இடம்பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 292 ஓட்டங்களை பெற்றது. 293 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 43 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கையடைந்தது.