fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பயங்கரவாதத்தை உலகில் இருந்து பூண்டோடு ஒழித்துக்கட்ட சகல நாடுகளும் நட்புறவு ரீதியாக கைக்கோர்த்துக்கொள்ள வேண்டும்-ஜனாதிபதி

ITN News Editor
By ITN News Editor மே 15, 2019 17:48

பயங்கரவாதத்தை உலகில் இருந்து பூண்டோடு ஒழித்துக்கட்ட சகல நாடுகளும் நட்புறவு ரீதியாக கைக்கோர்த்துக்கொள்ள வேண்டும்-ஜனாதிபதி

பயங்கரவாதத்தை உலகில் இருந்து பூண்டோடு ஒழித்துக்கட்ட சகல நாடுகளும் நட்புறவு ரீதியாக கைக்கோர்த்துக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உலக தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். சீனாவின் பீஜிங் நகரில் ஆரம்பமாகிய ஆசிய ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலாந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

ஆசிய ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான சர்வதேச மாநாடு முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீன ஜனாதிபதி ஷிஜிங்பிங் தலைமையில ஆரம்பமான மாநாட்டில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட அதிதியாக கலந்து கொண்டார். 47 நாடுகளின் அரச தலைவர்கள் உள்ளிட்ட 2000கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். பல்வேறு உலக சவால்களுக்கு முகங்கொடுக்கும் மனித சமூகத்தின் நிலைப்பாட்டுக்காக உலக மக்கள் அனைவரும் அந்நியோன்ய நம்பிக்கை மற்றும் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் செயற்படும் வகையில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கருத்து பரிமாறல்கள் அறிவுறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் எதிர்வரும் 22ம் திகதி வரை பீஜிங் நகரில் நடைபெறும். மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ஆசிய ஒழுக்க விழுமியங்கள் தொடர்பாக பேசும் இம்மாநாட்டில் எழுப்படும் குரல்கள் மற்றும் சீன ஜனாதிபதி ஷிஜிங்பிங்கின் தலைமைத்துவத்துடன்; கூடிய நட்புறவு ரீதியான அமைப்பாக உருவாகும் ஒன்றியம் மற்றும் இணக்கப்பாடு சர்வதேச பயங்கரவாதத்தையும் சமய தீவிரவாத பயங்கரவாதத்தையும் தோல்வியடையச்செய்வதற்கு பலமாக அமைய வேண்டுமென தெரிவித்தார். ஒழுக்க விழுமியங்களை மற்றொரு ஒழுக்க விழுமியத்தினால் அடிப்பணியச்செய்ய முடியாது என்றும், ஒழுக்க விழுமியங்கள் கலாசார சட்டங்கள் யாப்பு மற்றும் சர்வதேச உத்தரவுகளினால் அடிப்பணியச்செய்ய முடியாது என்றும் ஜனாதிபதி அங்கு தெரிவித்தார்.

எமது கற்புலனுக்கு அப்பால் எமது ஒழுக்க விழுமியங்களுக்கு ஏற்படும் சவால்களுக்கு அனைவரும் ஒன்றாக கைக்கோர்த்து செயற்படுவது இன்றியமையாதது. இதனால் ஏற்பட்டுள்ள அமைதியின்மைகள், ஒருவரை அடிப்பணியச்செய்து மற்றொருவர் மேலோங்கச்செய்யும் முயற்சிகளில் நாம் அனைவரும் எமது கலாசாரம், மற்றம் எமது ஒன்றிணைப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒருநாட்டின் ஒழுக்க விழுமியங்கள் மற்றும் கலாசாரம் சட்டத்தினாலோ யாப்பினாலோ உள்ளக உத்தரவுகளினாலோ அடிமைப்படுத்த முடியாது. முக்கியமாக ஆசிய ஒழுக்க விழுமியங்கள் தொடர்பாக பேசப்படும் விடயங்களில் சர்வதேச பயங்கரவாதம் சமய தீவிரவாத பயங்கரவாதம் இவை அனைத்தையும் தோல்வியடையச்செய்ய இந்த மாநாட்டுக்கு வருகை தந்த அனைவரது குரல் மற்றும் கருத்துக்கள் உலகம் முழுவதிலும் ஆநிய நட்புறவு ரீதியான அமைப்பு என்ற வகையில் ஜனாதிபதி அதிமேதகு ஷிஜிங்பிங் தலைமையில் கட்டியெழுப்பப்பட வேண்டுமென நான் யோசனை சமர்ப்பிக்கின்றேன்

ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரையை சுயாதீன தொலைகாட்சியில் இன்று இரவு 10 மணிக்கு எதிர்பாருங்கள்.

ITN News Editor
By ITN News Editor மே 15, 2019 17:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க