ரஷ்ய ஜனாதிபதிக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கும் இடையில் சந்திப்பு
Related Articles
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் போம்பியோவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பிற்காக இவர்கள் இரவரும் ரஸ்யாவின் சோச்சி நகருக்கு வருகை தந்திருந்தனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது ரஷ்யாவின் தலையீடு காணப்பட்ட தகவல் அம்பலமானதை தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டதுடன், மோசமான உறவும் நிலவியது.
இதனை தொடர்ந்து மீண்டும் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நட்புறவை ஏற்படுததுவதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெற்றது. அமெரிக்காவுடன் துரிதமாக உறவுகளை மேம்படுத்த தீர்மானித்திருப்பதாக இந்த சந்திப்பின் போது ரஸ்ய ஜனாதிபதி தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதிக்கும் இதே எண்ணம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் ரஸ்யா, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட வில்லையென்றும் அவர் கூறினார். இச்சந்திப்பின் போது வெனிசுவேலா, சிரியா, ஈரான் மற்றும் யுக்ரேனில் நிலவும் மோதல்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தனர். இவ்விஜயத்தின் போது அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சர்ஜி லெவ்ரோவையும் சந்தித்தார்.