இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலஸ்த்தீனர்கள் 30 பேர் காயம்
Related Articles
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலஸ்த்தீனர்கள் 30 பேர் காயமடைந்துள்ளனர். அதில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காஷா நிலப்பரப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நிராயுத பாணிகளாக இருந்த பொதுமக்களை இலக்காக வைத்து இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தியதாக பலஸ்த்தீன் குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் படையினர் முன்னெடுத்துவரும் தாக்குதலில் 275 பேர் பலியாகியுள்ளதாக பலஸ்த்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 17 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் பலஸ்த்தீன் செய்திகள் தெரிவிக்கின்றன.