fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எரிபொருள் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளது

ITN News Editor
By ITN News Editor மே 11, 2019 13:10

எரிபொருள் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளது

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் 3 ரூபாவாலும் ஒக்டெய்ன் 95 ரக பெற்றோல் 5 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீட்டரின் புதிய விலை 135 ரூபாவாகும்.

ஒக்டெய்ன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் புதிய விலை 164 ரூபாவாகுமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. சுப்பர் டீசல் லீட்டரின் விலையும் 2 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 136 ரூபாவாகும். ஒக்டெய்ன் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

பொதுமக்களுக்கு பொது போக்குவரத்து சேவைக்கும் பாதிப்பு ஏற்படாத விதத்தில் எரிபொருள் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்திய எண்ணெய் நிறுவனமும் எரி;பொருள் விலையை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 11, 2019 13:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க