fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட ஐரோப்பிய சங்கம் ஆதரவு

ITN News Editor
By ITN News Editor மே 10, 2019 12:06

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட ஐரோப்பிய சங்கம் ஆதரவு

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இலஙகைக்கு எந்தவொரு பங்களிப்பையும் வழங்க தயார் என ஐரோப்பிய சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐரோப்பிய சங்கத்தின் இலங்கை தூதுவர் துன்லாய் மேர்க் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய சங்கம் சகல சந்தர்ப்பங்களிலும் இலங்கையின் நெருங்கிய நண்பராக செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு தீர்வை பெற்று கொடுப்பதில் இலங்கைக்கு எந்தவொரு பங்களிப்பையும் வழங்க தயார் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த பத்து வருடங்களுக்குள் இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்கும் மனிதாபிமான உதவிகளுக்கும் என ஐரோப்பிய சங்கம் 760 மில்லியன் யூரோவுக்கும் கூடுதலான நிதியை வழங்கியுள்ளது.

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை பெற்று கொடுத்ததன் ஊடாக ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக்கொள்ளவும் இலங்கைக்கு முடிந்துள்ளதாக ஐரோப்பிய சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 10, 2019 12:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க