fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் 90 சதவீதமானவர்களுக்கு நஸ்டயீடு

ITN News Editor
By ITN News Editor மே 10, 2019 12:06

தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் 90 சதவீதமானவர்களுக்கு நஸ்டயீடு

உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நஷ்டயீடு வழங்கும் பணிகள் 90 சதவீதம் அளவில் பூர்த்தியடைந்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார உரையாற்றுகையில் ;

“கடந்த 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த சகலருக்கும் நஸ்டயீடு வழங்க தீர்மானித்தோம். இவற்றில் 90 சதவீதமானவர்களுக்கு நஸ்டயீடு வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு என பத்து இலட்சம் நஸ்டயீடாக வழங்கப்பட்டது. மரண சான்றிதழ் கிடைத்தவுடன், எஞ்சியவர்களுக்கும் நஸ்டயீட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அத்துடன் காமயடைந்தவர்களுக்கும் நஸ்டயீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. வைத்தியர்களின் அறிக்கை இதற்கு தேவைப்படுகின்றது. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டு நஸ்டயீடுகள் வழங்கப்படும்.” என தெரிவித்தார்

ITN News Editor
By ITN News Editor மே 10, 2019 12:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க