fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் படிப்படியாக வழமை நிலைக்கு

ITN News Editor
By ITN News Editor மே 9, 2019 14:20

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் படிப்படியாக வழமை நிலைக்கு

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் படிப்படியாக வழமை நிலைமைக்கு திரும்புவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுடன் ஒப்பிடும் போது இன்றைய தினம் மாணவர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டதாக கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரமழான் நோன்பினை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் வருகையில் தாக்கம் செலுத்தியிருப்பதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளின் பாதுகாப்புக்காக இராணுவத்தினரின் உதவியுடன் விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. புத்தளம், குருநாகல், காலி உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்களின் வருகை பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட தினத்தை விட அதிகமாக இருப்பதாக அதிபர்கள் தெரிவித்துள்ளனர். உரிய பாதுகாப்பு நடைமுறைகள் அமுல்படுத்தப்படுவதால் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு அதிபர்கள் பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மே 9, 2019 14:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க