fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கிராமிய பாதைகளை அபிவிருத்தி செய்ய விசேட திட்டங்கள்

ITN News Editor
By ITN News Editor மே 9, 2019 13:23

கிராமிய பாதைகளை அபிவிருத்தி செய்ய விசேட திட்டங்கள்

வீதி அபிவிருத்தி அமைச்சினால் கிராமிய பாதைகளை அபிவிருத்தி செய்ய விசேட திட்டங்களை அமுல்படுத்தி வருவதாக அவ்வமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி  கருத்து தெரிவிக்கையில் ;

“வீதி அபிவிருத்தி அமைச்சினால் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 2019ம் ஆண்டு விசேட திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் 160 தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கும் வகையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு 12ம் திகதி இரத்தினபுரியில் இடம்பெறவுள்ளது. பிரதமர் மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. அத்துடன் நாடெங்கிலும் உள்ள தேர்தல் தொகுதிகளில் வீதி வாரம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் நான்காயிரம் கிலோ மீட்டர் வீதிகளுக்கு காப்பட் போடவுள்ளதுடன், கற்களும் பதின்னக்கடவுள்ளன. அத்துடன் சிறிய பாலங்களும் அமைக்கப்படும்.”

 

ITN News Editor
By ITN News Editor மே 9, 2019 13:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க