fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச வாரிசு முதல் முறையாக ஊடகங்களுக்கு அறிமுகம்

ITN News Editor
By ITN News Editor மே 9, 2019 13:13

அரச வாரிசு முதல் முறையாக ஊடகங்களுக்கு அறிமுகம்

இங்கிலாந்து இளவரசர் ஹரி மேகன் தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தை நேற்றைய தினம் முதல் முறையாக ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் டயானா தம்பதியின் இளைய புதல்வரான இளவரசர் ஹரிக்கும் அவரது காதலியான மேர்கனுக்கும் கடந்த மே மாதம் 19ம் திகதி திருமணம் இடம்பெற்றது. கடந்த திங்கள் அன்று இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஹார்வி ஹெரிசன் மௌவுன்ட் பேர்ட்டன் வின்சன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தனது திருமணத்தின் போதே அரச சம்பிரதாயங்களை மீறி செயல்பட்ட இளசரசர் ஹரி தனது குழந்தைக்கு பெயர் சூட்டுவதிலும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வின்சர் மாளிகையில் வைத்து மகாராணியான 2வது எலிசபத்தும் அவரது கணவர் எடின் பிரோவும் அவர்களது பேரனை பார்த்த பின்னர் ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து குழந்தையின் தாயான மேர்கன் தனது குழந்தைக்கு தனது பிரியத்துக்குக்குரிய தோழியான ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ராவை ஞான தாயாகவும் அவரது கணவர் நிக் ஜொஹனஸை ஞான தந்தையாகவும் நியமிக்க தீர்மானித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 9, 2019 13:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க