fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்த 3 கட்டங்களின் கீழ் வேலைத்திட்டங்கள்

ITN News Editor
By ITN News Editor மே 8, 2019 15:49

சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்த 3 கட்டங்களின் கீழ் வேலைத்திட்டங்கள்

சுற்றுலா தொழிற்துறை மேம்பாட்டுக்கான வேலைத்திட்டங்கள் மூன்று கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுமென இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுற்றுலாப்பயணிகளினூடாக தகவல்களை பகிர்வதும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. சர்வதேச மேம்பாட்டு வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுமென அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் உபாலி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுற்றுலா தொழிற்துறை மேம்பாட்டுக்கென நிவாரண பெக்கேஜ் ஒன்றை பெற்றுக்கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தனியார் நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கென இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு  உபகரணங்களுக்கான தீர்வை வரி விலக்கை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 8, 2019 15:49

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.31178.06
USA
Pound219.38226.29
UK
Euro195.48202.19
EU
Yen1.591.65
Japan
Yuan25.1126.28
China
Dollar120.42125.45
Australia
CountryCurrencyRate
Dinar467.71
Dinar580.41
Riyal457.99
Riyal48.42
Riyal47.01
Dirham48.00