fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்று முதல் எதிர்வரும் 7 நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு வாரம் அமுலில்

ITN News Editor
By ITN News Editor மே 8, 2019 09:52

இன்று முதல் எதிர்வரும் 7 நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு வாரம் அமுலில்

இன்று முதல் எதிர்வரும் 7 நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு விசேட பிரிவு தெரிவித்துள்ளது. 18 மாவட்டங்களை இலக்காக கொண்டு டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய வானிலையை அடுத்து நுளம்பு பெருகுவதை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். மேல் மாகாணத்தில் கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படும் பகுதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, காலி, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு விசேட பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஹசித்த திசேரா தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 8, 2019 09:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க