fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலக கிண்ண போட்டிக்கான இலங்கை அணி இங்கிலாந்து பயணம்

ITN News Editor
By ITN News Editor மே 7, 2019 14:18

உலக கிண்ண போட்டிக்கான இலங்கை அணி இங்கிலாந்து பயணம்

உலக கிண்ண போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை இங்கிலாந்து நோக்கி பயணித்துள்ளது. திமுத் கருணாரத்ன தலைமையில் இலங்கை அணி இம்முறை உலக கிண்ண தொடரில் விளையாடவுள்ளது.

இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி சிரேஷ்ட வீரர்களின் ஒத்துழைப்புடன் உலக கிண்ணத்தை வெல்லுமென அணி தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்தார்.

இங்கிலாந்து பயணித்துள்ள இலங்கை வீரர்களுக்கான நேற்றைய தினம் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் விசேட மதவழிபாடுகள் இடம்பெற்றன. அதன் பின்னரே திமுத் கருணாரத்ன ஊடகங்களுக்கு இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை எதிர்வரும் 30ம் திகதி ஆரம்பமாகவுள்ள உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டி எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி கார்டிப்பில் நடைபெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 7, 2019 14:18

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க