fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நீர் கொழும்பு மோதல்களில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு பிரதமர் அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor மே 6, 2019 13:44

நீர் கொழும்பு மோதல்களில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு பிரதமர் அறிவிப்பு

நேற்றைய தினம் நீர்கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மையினால் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நஸ்டயீடு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியிருப்பதாக பிரதமர் செயலகம் தெரிவிக்கின்றனது. சொத்துக்கள் தொடர்பாக உரிய மபிப்பீடுகளை மேற்கொண்டு நஸ்டயீடு வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவித்திருப்பதாக பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் தேசிய கொள்கை வகுப்பு, பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் செயலகத்தின் மூலம் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலகம் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது, இதேவேளை நீர்கொழும்பில் ஏற்பட்ட நிலைமை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், இப்பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு இன்று காலை 7 மணியுடன் நீக்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor மே 6, 2019 13:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க