fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மதூசிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தொடர்ந்தும் விசாரணை

ITN News Editor
By ITN News Editor மே 6, 2019 05:20

மதூசிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தொடர்ந்தும் விசாரணை

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூசிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் டுபாயில் கைதான மாகந்துரே மதூசிடம் 3 மாத காலங்களாக டுபாய் பொலிசார் விசாரணைகள் மேற்கொண்டு வந்தனர். நாடு கடத்தப்பட்ட அவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் பொறுப்பேற்றனர்.

விமான நிலையத்தில் வைத்து 20 நிமிட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே மாகந்துரே மதூஷ் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். மனித படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் மாகந்துரே மதூசிற்கு நேரடியாக தொடர்புள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 6, 2019 05:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க