பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நட்டஈடு வழங்கும் பணிகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 80 வீதமானோருக்கு நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கமைய நட்டஈடு வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈட்டின் ஒருதொகை வழங்கப்பட்டுள்ளது. மரண சான்றிதழ் வழங்கப்பட்டதன் பின்னர் எஞ்சிய தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சான்றிதழ்களுக்கமைய ஒரு இலட்சம் ரூபா முதல் 5 இலட்சம் ரூபா வரை நட்டஈடு வழங்கப்படும்.
இதேவேளை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபா நட்டஈடாக வழங்கப்படுமென அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.