திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி சந்தேகநபர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் திருகோணமலை – கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 26 க்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 50 கிலோ கிராம் மீன் , இயந்திர படகு மற்றும் 250 மீற்றர் நீளமாக மீன்பிடி வலையும் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.