fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடற்பகுதிகளில் கடும் காற்று வீசும் : மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை.

ITN News Editor
By ITN News Editor மே 1, 2019 14:27

கடற்பகுதிகளில் கடும் காற்று வீசும் : மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை.

பொனி புயல் தற்போது திருகோணமலையிலிருந்து 650 கிலோ மீற்றர் தொலைவில் காணப்படுகிறது. அது இன்று மாலையாகும்போது இலங்கையை விட்டு விலகிச்செல்ல ஆரம்பிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.

எவ்வாறெனினும் வடக்கு, கிழக்கு மற்றும் தென் கடற்பகுதிகளில் அதன் தாக்கம் தொடர்ந்தும் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்தார். இதனால் இப்பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நிலவுமென அவர் குறிப்பிட்டார்.

அதனால் வடக்கு மற்றும் கிழக்கு ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தென் கடற்பகுதிகளில் இந்நிலமை காணப்படுவதால் மீள் அறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல் நாட்டுக்குள்ளும் காற்றின் வேகம் சற்று அதிகரித்து காணப்படும். மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்களிலும், வடமேல் மற்றும் வடத்திய மாகாணங்களிலும் அவ்வப்போது கடும் காற்று வீசும்.

அப்பகுதிகளில் 150 மில்லி மீற்றர் அளவிலான பலத்த மழை பெய்வதற்கான சாத்தியமும் காணப்படுகிறது. அதேபோல் நாட்டின் ஏனைய கடற்பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுமெனவும், இதனால் மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் அவதானமாக இருக்கவேண்டுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor மே 1, 2019 14:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க