fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலகின் பிரம்மாண்ட சீனாவின் சர்வதேச தோட்டக்கலை கண்காட்சி

ITN News Editor
By ITN News Editor மே 1, 2019 11:55

உலகின் பிரம்மாண்ட சீனாவின் சர்வதேச தோட்டக்கலை கண்காட்சி

உலக பிரம்மாண்டமான சர்வதேச தோட்டக்கலை கண்காட்சி சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதனால் பீஜிங் தலைநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சீனாவின் தலைநகர் பீஜிங்கில் சர்வதேச தோட்டக்கலை கண்காட்சி தொடங்கப்பட்டது. இந்த கண்காட்சி வரும் ஒக்டோபர் 7 வரை 162 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சிக்காக பிரம்மாண்ட பூங்கா பீஜிங்கின் ‘நியூ சில்க் ரோட்’ பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை புகழ்பெற்ற பிரிட்டன் நாட்டின் வடிவமைப்பாளர்களான ஜேம்ஸ் ஸ்மித்தோ, ஜான் ஸ்டூவர்ட் ஸ்மித் ஆகியோர் இணைந்து பார்ப்பவர் வியக்கும் வண்ணம் வடிவமைத்துள்ளனர்.

இந்த கண்காட்சியில் 110 நாடுகளில் இருந்து சர்வதேச அமைப்புகள் இதன் தொடக்க விழாவில் கலந்துக் கொண்டன. பீஜிங்கில் கடுமையான வறட்சி நிலவிவரும் நிலையில் தண்ணீரை சேமிக்கும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 1, 2019 11:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க