fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆசிய அபிவிருத்தி வங்கி 8 திட்டங்களுக்காக 815 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2019 18:10

ஆசிய அபிவிருத்தி வங்கி 8 திட்டங்களுக்காக 815 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி

இவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ள எட்டு திட்டங்களுக்காக 815 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்க தயாராகவிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. துறைமுக பிரவேச அதிவேக வீதி அபிவிருத்தி திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கென 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும். ரயில் சேவையை முறையாக முன்னெடுப்பதற்கு பழைய சமிக்ஞைமுறை பிரவேச பத்திர முறைகளை நவீனமயப்படுத்துவதற்கு அடுத்த மாதம் பேச்சுவார்த்தைகள் கொழும்பில் இடம்பெறும்.

இதற்கென 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும். ஆசிய அபிவிருத்தி வங்கியின் 52வது வருடாந்த பொதுகூட்டம் எதிர்வரும் இரண்டாம் திகதி முதல் ஐந்தாம் திகதி வரை பிஜியில் நடைபெறும். சார்க் வலய நாடுகளின் நிதியமைச்சர்களின் கூட்டமும் அங்கு நடைபெறும். இதில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட தூதுக்குழு இன்று இங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2019 18:10

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.31178.06
USA
Pound219.38226.29
UK
Euro195.48202.19
EU
Yen1.591.65
Japan
Yuan25.1126.28
China
Dollar120.42125.45
Australia
CountryCurrencyRate
Dinar467.71
Dinar580.41
Riyal457.99
Riyal48.42
Riyal47.01
Dirham48.00