fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொனி சூறாவளி காரணமாக கிழக்கில் பெரிதும் பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2019 13:28

பொனி சூறாவளி காரணமாக கிழக்கில் பெரிதும் பாதிப்பு

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த பொனி சூறாவளியானது ஒரு பலத்த சூறாவளியாக மாற்றமடைய கூடிய சாத்தியம் காணப்படுவதால் கிழக்கு கரையோரப்பகுதிகளில் கடற்றொழில் நடவடிக்கைகளிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுள்ளது. சூறாவளியின் தாக்கம் காரணமாக பல பிரதேசங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

தற்போது நிலவுகின்ற மழையுடன் கூடிய கலாநிலையத் தொடர்ந்து அனர்த்தம் குறித்தும் அவதானத்துடன் இருக்குமாறு இடர்முகாமைத்து மத்திய நிலையம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடமாகாணத்தில் பலத்த மழையுடன் வீசிய பலத்த காற்றினால் பல வீடுகள் பல வீடுகள் சேதமடைந்தன. வவுனியா, ஓமந்தை, இரட்டைப் பெரிய குளம், தாண்டிக்குளம் ஆகிய பகுதிகளில ஒரு சில வீடுகளின் கூரைகள் தூக்கி எறியப்பட்டன. சுமார் 30 வீடுகளுக்கு இவ்வாறு சேதம் ஏற்பட்டுள்ளதாக வடமாகாண இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பலத்த காற்று காரணமாக மொனராகலை, செவனகல, கிரிவௌ, கிரிஇப்பன் வௌ, ஹபரலுவ போன்ற பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இப்பகுதிகளில் சுமார் 15 வீடுகள் சேதமடைந்தன. மரங்கள் முறிந்து வீழ்ந்ததனால இரண்டு வீடுகள் முழுமையாக சேதமடைந்ததுடன் வாழைச் செய்கையை மேற்கொண்டிருந்த சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பு பலத்த காற்றினால் சேதமாக்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2019 13:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க