fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐ.எஸ். தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி வெளியிட்டுள்ள ஒளிநாடா

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2019 13:15

ஐ.எஸ். தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி வெளியிட்டுள்ள ஒளிநாடா

கடந்த உயிர்த்த ஞாயிறன்று இலங்கை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது ஐ.எஸ்.அமைப்பின் இறுதிக் கோட்டையாக காணப்பட்ட ஈராக்கின் பகுஸ் நகர் கைப்பற்றப்பட்டமைக்கு பழிவாங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாக ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி வெளியிட்டுள்ள ஒளிநாடாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபூபக்கர் அல் பக்தாதி 2014 ம் ஆண்டிற்கு பின்னர் தோற்றிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அமெரிக்காவினால் மேற்கொண்ட தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி உயிரிழந்தாதாக பல தடவைகள் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஐ.எஸ். பயங்கரவாத தலைவர் சிரியாவின் மொசுல் நகரில் வைத்து இறுதியாக ஒளிநாடாவொன்றை வெளியிட்டதுடன் பின்னர் அவர் தொடர்பான எவ்வித தகவல்களும் வெளிவரவில்லை.

இவ்வொளிநாடாவை பதிவு செய்த, வெளியிட்ட தினம் குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இது ஏப்ரல் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட ஒளி நாடாவாகுமென ஐ.எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் தமது அமைப்பிலிருந்து விடுபடும் ஈராக் மற்றும் சிரியாவின் நிலப்பரப்புக்களை தாம் கைப்பற்றப்போவதாகவும் அவ்வொளிநாடா மூலம் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது நீடித்து செல்லும் போரெனவும் ஐ.எஸ்.தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2019 13:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க