fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அவசரகால சட்டத்தின் சில சரத்துக்கள் நேற்று நள்ளிரவு முதல் அமுலில்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 23, 2019 15:27

அவசரகால சட்டத்தின் சில சரத்துக்கள் நேற்று நள்ளிரவு முதல் அமுலில்

நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்துடன் தொடர்பான சரத்துக்களை மாத்திரம் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலாகும் வகையிலேயே வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டினதும் நாட்டு மக்களதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அதிகாரத்தை முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு வழங்க நேற்றையதினம் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் அவசரகாலநிலையை பிரகடனப்படுத்துவதனூடாக மக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் அமைதியை பாதுகாப்பதற்கும் முடியுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. அவசரகால சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பிற்கான சரத்து மாத்திரம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 23, 2019 15:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo