fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எந்தவொரு சதித்திட்டத்தினாலும் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாதென அமைச்சர் மங்கள தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 20, 2019 18:42

எந்தவொரு சதித்திட்டத்தினாலும் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாதென அமைச்சர் மங்கள தெரிவிப்பு

எந்தவொரு சதித்திட்டங்களினாலும் தற்போதய அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாதென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

3 தசாப்த கால மாத்தறை கத்தாவ எனப்படும் புகைப்பட கண்காட்சியின் ஆரம்பநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாரிய கஷ்டத்தில் பெற்றுக்கொண்ட அரசாங்கத்தை யாரும் இலகுவாக கவிழ்ப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது.

விசேடமாக 52 நாட்களில் அதனை நடைமுறையில் காண்பித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். சூத்திரதார செயற்பாடுகளின் ஊடாக எமது அதிகாரத்தை பறிக்க முயற்சித்த போதிலும் அதற்கு எதிராக நேரடியாக செயற்பட்டவர் என்ற அடிப்படையில் தற்போதய அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாதென அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து ஜனாதிபதியொருவர் தெரிவுசெய்யப்படுவதை எவராலும் தடுக்க முடியாதெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் மங்கள சமரவீரவின் அரசியல் வாழ்க்கையின் 30 வருட பூர்த்தியை முன்னிட்டு குறித்த புகைப்பட கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு கண்காட்சி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 20, 2019 18:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க