fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜப்பானுக்கு அனுப்புவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 20, 2019 17:02

ஜப்பானுக்கு அனுப்புவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட நபரொருவர் கைது

ஜப்பானுக்கு அனுப்புவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட நபரொருவர் கொள்ளுப்பிட்டியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 6 கடவுச்சீட்டுக்கள், போலியாக செய்யப்பட்ட 6 ஜப்பான் விசாக்கள், 2 வங்கிக் கணக்கு புத்தகங்கள் மற்றும் 2 டெப்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் வத்தளை ஹூனுப்பிட்டியைச் சேர்ந்த 36 வயதானவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சந்தேக நபருக்கு எதிராக குருநாகல் விசேட குற்ற விசாரணை பிரிவில் பல முறைப்பாடுகள் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர் கொள்ளுப்பிட்டி பொலிசாரினால் குருணாகல் விசேட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 20, 2019 17:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க