fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் சுற்றுப்பயணத்தில் புதிய கட்டுப்பாடு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 20, 2019 14:23

உலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் சுற்றுப்பயணத்தில் புதிய கட்டுப்பாடு

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இந்திய வீரர்கள் தமது குடும்பத்தவர்களை கிரிக்கெட் சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச்செல்வது தொடர்பில் புதிய விதிமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 30ம் திகதி உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இந்திய வீரர்கள் தமது குடும்பத்தினரை கிரிக்கெட் சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச்செல்வது தொடர்பில் இந்திய கிரிக்கெட் சபை புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

தொடரின் முதல் 20 நாட்களுக்கு வீரர்கள் தமது குடும்பத்தினருடம் தங்கியிருப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர் ஆரம்பமாகி 20 நாட்களின் பின்னரே கிரிக்கெட் சுற்றுப்பயணத்துடன் உறவினர்களையும் இணைத்துக்கொள்ள முடியுமென இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை உலக கிண்ண தொடரை முன்னிட்டு இந்திய அணி எதிர்வரும் மே மாதம் 22ம் திகதி இங்கிலாந்துக்கு பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 20, 2019 14:23

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க