நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
வாரயிறுதியில் வாகன நெரிசல் மேலும் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் மாற்றுவீதியைப் பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.
நுவரெலியாவிலிருந்து கொழும்பு வருகை தருகைவோர் கம்பளையிலிருந்து ஹெம்மாத்தகம ஊடாக மாவனல்லை நகரை வந்தடைய முடியும். குறித்த வீதி காபட் இடப்பட்டு செப்பனிடப்பட்டுள்ளது.
குறித்த வீதியைப் பயன்படுத்துவதன் மூலம் பேராதனை, கடுகண்ணாவை போன்ற பகுதிகளுக்கு செல்லாது இலகுவாக மாவனெல்லை நகரை அடையமுடியுமென வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கம்பளையிலிருந்து ஹெம்மாத்தகம ஊடாக மாவனெல்லை நகருக்கு வருவதன் மூலம் பெருமளவு நேரத்தை சிக்கனப்படுத்த முடியும். குறித்த வீதி குறுந்தூரத்தை கொண்டதெனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.